Friday, April 12, 2013

படித்ததில் பிடித்தது

காட்டில் ஒரு சிங்கம், ஒரு ஆட்டை அழைத்தது. என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல், ”என்று கேட்டது. ஆடு முகர்ந்து பார்த்துவிட்டு, ’ஆமாம்,நாறுகிறது. என்று சொல்லிற்று. உடனே சிங்கம், ”முட்டாளே, உனக்கு எவ்வளவு திமிர், ”என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது.

          டுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து. அதனுடைய கருத்தைக் கேட்டது. ஓநாய் முகர்ந்து பார்த்துவிட்டு, ”கொஞ்சம் கூட நாறவில்லை, ”என்றது. சிங்கம், ”மூடனே, பொய்யா சொல்கிறாய்?” என்று கூறி அடித்துக் கொன்றது.

          பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது. நரி சொன்னது, ”நாலு நாளா கடுமையான ஜலதோஷம். அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை. சிங்கம் நரியை விட்டுவிட்டது.

        
  புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.

ரு நிறுவனத்தின் மேலாளராக புதிதாக ஒருவர் சேர்ந்தார். அங்கிருந்து மாறுதலாகி செல்பவர் அனுபவம் வாய்ந்தவர். எனவே புதியவர் அவரிடம்  திறமையான நிர்வாகம் பற்றி சில ஆலோசனைகள் கேட்டார். அவர் உடனே புதியவரிடம் மூன்று கவர்களைக் கொடுத்து சொன்னார்,” உங்களுக்கு எப்போது பிரச்சினை வருகிறதோ அப்போது மட்டும் ஒவ்வொரு கவராக எடுத்துப் பார்த்துக் கொள்ளவும். அதில் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு இருக்கும்,” புதியவர் அவருக்கு நன்றி கூறி மூன்று கவர்களையும் வாங்கி வைத்துக் கொண்டார். 

          ரு மாதத்திலேயே அவருக்கு தொழிலாளர்களிடமிருந்து ஒரு நெருக்கடிவந்தது. உடனே முதல் கவரை எடுத்து திறந்து படித்தார். அதில்,” நான் புதியவன். எனவே எனக்கு சிறிது கால அவகாசம் வேண்டும் என்று கேட்கவும்.என்று எழுதியிருந்தது. அதேபோல அவரும், ”நான் இப்போதுதானே வந்திருக்கிறேன். நிறுவனத்தைப் பற்றி  முழுமையாக அறிந்தால் தானே எதுவும் செய்ய முடியும். என்றார். வந்தவர்களும் அது நியாயம் எனக் கருதி சென்று விட்டனர். அடுத்து ஒரு ஆண்டில்  மறுபடியும் பிரச்சினை வந்தது. இரண்டாவது கவரை திறந்து பார்த்தார். அதில், ”முன்பு மேலாளர் களாய்  இருந்தவர்களைக்  குறை சொல்,” என்றிருந்தது. உடனே அவரும் சொன்னார், ”பாருங்கள், நான் என்ன செய்வது? இந்த நிறுவனத்தை முன்னேற்ற நான் இரவு பகலாக சிந்தித்து செயல் பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இங்கு முன்பு பணி புரிந்தவர்கள் என்ன தான் வேலை பார்த்தார்களோ தெரியவில்லை. எதை எடுத்தாலும் ஒரே குப்பை இதை சீர் செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. வந்தவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் சென்று விட்டார்கள்.

          ப்போது அவர் வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. இப்போது தொழிலாளர் தலைவர்கள் தீவிரமாக வந்தார்கள். இவருக்கு  எப்படி சமாளிப்பது என்ற பயம் வந்து விட்டது. உடனே மூன்றாவது கவரை எடுத்துப் படித்தார். அதில். உனக்கு அடுத்து வருபவருக்கு மூன்று கவர்களைத் தயார் செய்துவைக்கவும், ”என்று எழுதப்பட்டிருந்தது.

ரு குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை பிரசங்கம் செய்ய ஒரு ஊரில் கூப்பிட்டிருந்தார்கள். கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னார்கள். குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார்.அன்று நல்ல மழை. கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள். குரு வந்த போது யாருமில்லை. பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால் அவருக்கு ஏமாற்றம். அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும் தான். என்ன செய்யலாம் என்று அவனையே கேட்டார்.
 
          வன் சொன்னான், ”ஐயா, நான் குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. அனால் ஒன்றே ஒன்று மட்டும் தெரியும். நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போகும் போது, எல்லாக் குதிரைகளும் வெளியே சென்றிருக்க, ஒரே ஒரு குதிரை மட்டும் இருந்தாலும், நான் அந்தக் குதிரைக்குப் புல்லை வைத்து விட்டுத்தான் வருவேன்.படாரென்று அறைந்தது போல் இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக் காரனைப் பாராட்டி விட்டு, அவனுக்கு மட்டும் தன பிரசங்கத்தை ஆரம்பித்தார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் என்று சரமாரியாகப் பேசிப் பிரமாதப் படுத்தி விட்டார். பிரசங்கம் முடிந்ததும், எப்படி இருந்தது என்று அவனைப் பார்த்துப் பெருமையாகக் கேட்டார்.
          
          யா, நான் குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும். நான் புல்லு வைக்கப் போன இடத்தில் ஒரே ஒரு குதிரை தான் இருந்தது என்றால், அதற்கு மட்டும் தான் புல் வைப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டி விட்டு வர மாட்டேன், ”என்றான் அவன். அவ்வளவு தான்! குரு அதிர்ந்து விட்டார்.


ரு அரசன், நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும்  என்று அறிவித்தார். நாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை. 

          ரு நாள்  கந்தல் உடை அணிந்த ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான். அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார். அந்த ஏழை சொன்னான்,” அரசே, உங்களுக்கு ஞாபகம்  இருக்கிறதா? நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது. அதை வாங்கத்தான்  இன்று இங்கு நான் வந்தேன்.அரசனுக்கு கோபம் வந்து விட்டது.நீ பொய் சொல்கிறாய்   ..நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?’ என்று கத்தினான்.

          டனே ஏழை சொன்னான்,” அரசே,நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள், நான் சரியான பொய் சொன்னேன் என்று. எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்.அரசன்,தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான். உடனே  சொன்னான்,”  இல்லை, இல்லைநீ பொய் சொல்லவில்லை.என்று அவசரமாக மறுத்தான். ஏழை சொன்னான்,”  நல்லது அரசே,நான் சொன்னது பொய் இல்லை, உண்மைதான் என்றால், எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்,” அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.

ஒரு சர்வாதிகாரி தன பிறந்த நாளில் தன் படத்தைக் கொண்ட தபால் தலைகளை ஏராளமாக வெளியிட்டார்.ஆனால் அந்த தபால் தலைகள் அதிகம் விற்பனை ஆகவில்லை.தன செயலரை அழைத்து காரணம் கேட்டார்.செயலர் சொன்னார்,”அந்த தபால் தலைகள் சரியாக ஒட்டவில்லை.அதனால்தான் சரியான விற்பனை இல்லை,” சர்வாதிகாரிக்குக்  கோபம் வந்தது. தபால் நிர்வாகியை அழைத்து,” ஒழுங்காகக் கோந்து பூசப்பட்டிருந்தால் ஓட்டுவதில் சிரமம் இருக்காதே? ஏன் அதை நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லை?” என்று கேட்டார். நிர்வாகி சொன்னார்,” கோந்து சரியாகத்தான் பூசப்பட்டிருக்கிறது. ஆனால் எச்சில் உமிழ்ந்தவர்கள் கோந்து இருந்த பக்கத்தில் உமிழவில்லை.”    

No comments:

Post a Comment